என்.ஜெகவீரபுரம் கிராமத்தில்புதிய ரேஷன்கடை கட்டிடம்
என்.ஜெகவீரபுரம் கிராமத்தில் புதிய ரேஷன்கடை கட்டிடம் திறக்கப்பட்டது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
என். ஜெகவீரபுரம் கிராமத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.13.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன்கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் தலைமை தாங்கினார். புதூர் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தி.மு.க வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், என். ஜெகவீரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகு பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story