என்.ஜெகவீரபுரத்தில்புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்:மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்


என்.ஜெகவீரபுரத்தில்புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்:மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

என்.ஜெகவீரபுரத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

தூத்துக்குடி

எட்டயபுரம்:

புதூர் யூனியன் என். ஜெகவீரபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11½ லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகு பாண்டி தலைமை தாங்கினார். விழாவில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் புதூர் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள முதலிபட்டி கிராமத்தில் வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக விழாவில் எம். எல். ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் மாவில்பட்டி கிராமத்தில் கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழாவிலும் அவர் கலந்துகொண்டார்.


Next Story