நாகையில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நாகையில் 2 பேர் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்
வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கொலை குற்றவாளிகள் தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வேளாங்கண்ணி தெற்கு பொய்கைநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆவிகுமார் மகன் ஆகாஷ் குமார் (வயது 22), ஆரிய நாட்டு தெரு கணேசன் மகன் ரோசரி கிரியேட்டர் (28) ஆகிய 2 பேர் மீதும் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது.இதையடுத்து இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். அதன் பேரில் ஆகாஷ்குமாரையும், ரோசரி கிரியேட்டரையும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story