நாசரேத்தில் சதுரங்கப் போட்டி
நாசரேத்தில் சதுரங்கப் போட்டி நடந்தது.
நாசரேத்:
ஒய்.எம்.சி.ஏ. சர்வதேச அமைப்பின் நிறுவனர் சர் ஜார்ஜ் வில்லியம்ஸ் 201-வது பிறந்த நாளை முன்னிட்டு, நாசரேத் ஒய்.எம். சி.ஏ. நிர்வாகமும், நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் துத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகமும் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப் பள்ளி எஸ். ஏ. தாமஸ் கலையரங்கில் நடைபெற்ற இப்போட்டி தொடக்க நிகழ்ச்சியில் நாசரேத் கனோன் ஆர்தர் மர்காஷியஸ் சபை மன்ற தலைவர் வெல்டன் ஜோசப் ஆரம்ப ஜெபம் செய்தார். தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் தேசிய கொடியை ஏற்றி சமாதானப் புறாக்களை பறக்க விட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குருவானவர் மர்காஸிஸ் டேவிட் வெஸ்லி ஆரம்ப ஜெபம் செய்தார். மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுதாகர் தலைமை தாங்கினார். நாசரேத் ஓய். எம்.சி.ஏ.தலைவர் எபனேசர், துத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக செயலாளர் பேராசிரியை கற்பகவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. நிர்வாக குழு உறுப்பினர் ஆர். எல்.ஏ.சுந்தரராஜ் வரவேற் புரை ஆற்றினார். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தொடர்பு அதிகாரி ஜாண்சன் பால் டேனியல், நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபகரன் பிரேம்குமார், நாசரேத் நகர பஞ்சாயத்து தலைவர் நிர்மலா ரவி, நாசரேத் நகர முன்னாள் தி.மு.க. செயலாளர் ரவி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நாசரேத் கிளை உதவி மேலாளர் தங்கபாண்டி ராஜகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டனர். நாசரேத் ஓய்.எம்.சி.ஏ. செயலர் சாமுவேல்ராஜ் நன்றி கூறினார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 70 பள்ளி, கல்லூரிகளில் இருந்து 372 சதுரங்க ஆட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.