நாசரேத்தில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது


நாசரேத்தில்  லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத்தில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் வெள்ளரிக்காயூரணி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 52). இவர் நாசரேத் பஸ்நிலையம் அருகே செல்போனில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட வெளிமாநில ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாசரேத் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சியோன் ராஜா சம்பவ இடத்துக்கு சென்று அவரை பிடித்தார். பின்னர் அவரை நாசரேத் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த வெளிமாநில ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story