நாசரேத்தில் ஓய்வூதியர் சங்க ஆண்டு விழா
நாசரேத்தில் ஓய்வூதியர் சங்க ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
நாசரேத்:
நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க நாசரேத் வட்ட கிளை 60-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். பேராசிரியர் காசிராஜன் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் வரவேற்று பேசினார். சங்க செயலாளர் கொம்பையா ஆண்டறிக்கை மற்றும் வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். 105 வயதான முன்னாள் விவசாய பல்கலைக்கழக முதல்வர் டேனியல் சுந்தர்ராஜ், மாநில துணை தலைவர் அய்யலுசாமி, வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன் மற்றும் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் வட்ட பிரதிநிதிகள் வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியம் உயர்த்தி தர வேண்டும் எனவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நாசரேத் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் மகேஸ்வரன் மற்றும் ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.