நெய்வேலியில் ஆரோக்கியமான இந்தியா சுதந்திர ஓட்டம் என்.எல்.சி. நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் தொடங்கி வைத்தார்


நெய்வேலியில்  ஆரோக்கியமான இந்தியா சுதந்திர ஓட்டம்  என்.எல்.சி. நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் ஆரோக்கியமான இந்தியா சுதந்திர ஓட்டத்தை என்.எல்.சி. நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

கடலூர்

நெய்வேலி,

இந்திய அரசின், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சார்பில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் 'ஆரோக்கியமான இந்தியா - சுதந்திர ஓட்டம் 3.0' நெய்வேலியில் நடைபெற்றது. இதை என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் ராக்கேஷ்குமார் தலைமைதாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கடலூர் மாவட்ட கலெக்டா் பாலசுப்பிரமணியம், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், என்.எல்.சி. நிறுவன மின்துறை இயக்குனர் ஷாஜி ஜான், திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் மோகன் ரெட்டி, சுரங்கத்துறை இயக்குனர் சுரேஷ் சந்திர சுமன், கண்காணிப்புத்துறை தலைமை அதிகாரி எல்.சந்திரசேகர், நெய்வேலி மகளிர் மன்றத்தின் தலைமை புரவலர் சினேகா, வாய்ப்பு மற்றும் சேவைகள் அமைப்பின் தலைவி காஞ்சன் கம்ரா, செயல் இயக்குனர்கள் மற்றும் உயர்அதிகாரிகள், நெய்வேலி மகளிர் மன்றத்தின் புரவலர்கள் மற்றும் உறுப்பினர்கள், தொழிற்சங்க மற்றும் நலச்சங்க நிா்வாகிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story