பழங்குளம் ஊராட்சியில்விழிப்புணர்வு ஊர்வலம்
பழங்குளம் ஊராட்சியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
பழங்குளம் ஊராட்சியில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு
ஊராட்சி மன்ற தலைவர் செல்வகனி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.ஊராட்சி துணைத் தலைவர் குணசீலி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தனிநபர் உறிஞ்சிகுழி அமைத்தல், சுத்தம், சுகாதாரம், குப்பைகள் தரம் பிரித்தல் மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திப்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் கல்யாணராமன், ஊராட்சி செயலாளர் இசக்கியப்பன், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story