பள்ளிபத்து கிராமத்தில் வியாழக்கிழமை மனுநீதி நாள்


பள்ளிபத்து கிராமத்தில்  வியாழக்கிழமை மனுநீதி நாள்
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபத்து கிராமத்தில் வியாழக்கிழமை மனுநீதி நாள் நடக்கிறது

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் தாலுகா பள்ளிபத்து கிராமத்தில் நாளை (வியாழக்கிழமை) மாவட்ட கலெக்டர் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடக்கிறது. பள்ளிபத்து கிராம பொது மக்களிடம் இளையபெருமாள்விளையில் உள்ள இ-சேவை மைய கட்டிடத்தில் நாளை காலை 11 மணியளவில் மனுக்கள் பெறப்பட உள்ளது. அதனால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story