பாஞ்சாலங்குறிச்சியில்வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் வீரசக்கதேவி கோவில் திருவிழா மற்றும் அவரது விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அவரது வாரிசுதாரர் வீமராஜா என்ற ஜெக வீரபாண்டிய கட்டபொம்மன் துரையில் இல்லத்துக்கு ெசன்று, அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன், ஓட்டப்பிடராம் தாசில்தார் சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வக்குமார், மண்டல துணை தாசில்தார் ஸ்டாலின், வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.