பசுவந்தனையில்மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


பசுவந்தனையில்மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:28+05:30)

பசுவந்தனையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுந்தனையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜ், மிகாவேல், முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர் சந்திரா வரவேற்றார். கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், மின் நுகர்வோரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள், பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story