பெரியகுளம் நகராட்சியில் 60 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


பெரியகுளம் நகராட்சியில்  60 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

பெரிகுளம் நகராட்சி பகுதியில் 60 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவின் பேரில், பெரியகுளம் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் வணிக நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் நகராட்சி ஆணையாளர் புனிதன், சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, சேகர் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் குழுவினர் ஈடுபட்டனர். அப்போது பெரியகுளம், அம்மையநாயக்கனூர் ரோடு, பழைய பஸ் நிலையம், தண்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல், டீக்கடைகள் மற்றும் கடைகளில் சோதனை நடத்தினர். அதில் சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடு்த்து அந்த கடைகளில் இருந்து சுமார் 60 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் அடிக்கடி சோதனை நடத்தப்படும் என்றும், அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.


Related Tags :
Next Story