பெருந்துறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு; முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பூங்கொத்து கொடுத்தார்


பெருந்துறையில்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு;  முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பூங்கொத்து கொடுத்தார்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெருந்துறையில் வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பின்போது முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பூங்கொத்து கொடுத்தார்.

ஈரோடு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நேற்று காலையில் பெருந்துறையில் நடந்த அரசு விழாவில் பங்கேற்க ஈரோட்டில் இருந்து வேன் மூலம் பெருந்துறை சென்றார். அப்போது வழி நெடுகிலும் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெருந்துறை மற்றும் கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி பகுதிகளில் வாழைக்கன்று தோரணங்கள் கட்டி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபோல் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர்களில் வரவேற்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. பெருந்துறை போலீஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்-அமைச்சரை வரவேற்க பெருந்துறையில் வரலாறு காணாத அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் பெருந்துறை நகரமே குலுங்கியது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.


Related Tags :
Next Story