ஊரக திறனாய்வு தேர்வில்மெஞ்ஞானபுரம் பள்ளி மாணவி சாதனை
ஊரக திறனாய்வு தேர்வில் மெஞ்ஞானபுரம் பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி
மெஞ்ஞானபுரம்:
2022-2023-ஆம் கல்வி ஆண்டில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழக அரசால் நடத்தப்படும் ஊரக திறனாய்வுத் தேர்வில் மெஞ்ஞானபுரம், எலியட் டக்ஸ் போர்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சுதர்ஷினிதேவி வெற்றி பெற்றுள்ளார். அந்த மாணவியின் மேல்படிப்புக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் சசிகுமார், பள்ளித் தலைமையாசிரியை சில்வியா ரேச்சல், பள்ளி ஆட்சி மன்ற குழுவினர், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவிகள் பாராட்டினர்.
Related Tags :
Next Story