சேலம் கோட்டத்தில், கடந்த ஆண்டில் ரெயிலில் அடிபட்டு 299 பேர் பலி


சேலம் கோட்டத்தில், கடந்த ஆண்டில் ரெயிலில் அடிபட்டு 299 பேர் பலி
x

சேலம் ரெயில்வே கோட்டத்தில் கடந்த ஆண்டில் ெரயிலில் அடிபட்டு 299 பேர் பலியாகி உள்ளனர்.

சேலம்

சூரமங்கலம்,

ரெயிலில் அடிபட்டு...

சேலம் ெரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ெரயிலில் அடிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சேலம், தர்மபுரி, ஓசூர், காட்பாடி, ஜோலார் பேட்டை ெரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டில் 299 பேர் பலியாகி உள்ளனர். அதில் சேலத்தில் 100 பேரும், தர்மபுரியில் 14 பேரும், ஜோலார்பேட்டையில் 116 பேரும், காட்பாடியில் 54 பேரும், ஓசூரில் 15 பேர் என மொத்தம் 299 பேர் ெரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்.

மேலும் விருத்தாசலம், ஜோலார்பேட்டை ெரயில் மார்க்கத்தில் ெரயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இந்த மார்க்கத்தில், ெரயில்வே தண்டவாளத்தையொட்டி குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் வசிப்பவர்கள் தினமும் காலையில், தண்டவாள பகுதிகளில் காலைக்கடன் கழித்து வருகின்றனர். இதனால் பலர் ெரயிலில் அடிபட்டு இறந்து விடுகின்றனர்.

அபராதம் விதிப்பு

இதை கட்டுப்படுத்த ெரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ெரயில்வே போலீசார் இந்த மார்க்கத்தில் தண்டவாளத்தை கடந்து செல்பவர்களையும், தண்டவாளத்தில் அசுத்தம் செய்பவர்களையும் பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

மேலும் சேலம் உட்கோட்ட பகுதியில் உள்ள ஆளில்லா ெரயில்வே கேட் மற்றும் அதையொட்டி உள்ள பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு ெரயில்வே போலீசார் விபத்து குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து ெரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, தண்டவாளத்தை யொட்டிய கிராம மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டில் மட்டும் 299 பேர் ெரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். மேலும் பலியான 48 பேர் யார் என அடையாளம் தெரியவில்லை. தற்போது ெரயிலில் அடிபட்டு இறப்போரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்து வருகிறோம்' என்றார்கள்.


Related Tags :
Next Story