சாத்தான்குளத்தில் வருவாய் உதவியாளர் பணிக்கு 180 பேர் தேர்வு எழுதினர்


சாத்தான்குளத்தில்  வருவாய் உதவியாளர் பணிக்கு 180 பேர் தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:46 PM GMT)

சாத்தான்குளத்தில் நடந்த வருவாய் உதவியாளர் பணிக்கு 180 பேர் தேர்வு எழுதினர்

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் தாலுகாவில் சாத்தான்குளம், எழுவரைமுக்கி கிராமத்துக்கு வருவாய் உதவியாளர் பணியிடத்துக்கு நேற்று சாத்தான்குளம் டி.என்.டி.ஏ.ஏ. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் விண்ணப்பித்திருந்த 256 பேரில் 180 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையத்தை திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது தாசில்தார் தங்கையா, துணை தாசில்தார் கோமதிநாயகம், வட்ட வழங்கல் அலுவலர் அகிலா உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story