சாத்தான்குளத்தில் 2 அரசு துணை சுகாதார நிலையங்கள் திறப்பு


சாத்தான்குளத்தில்  2 அரசு துணை சுகாதார   நிலையங்கள் திறப்பு
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் 2 அரசு துணை சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் இட்டமொழி ரோடு மற்றும் காந்தி நகர் ஆகிய இடங்களில் முதலூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கு தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நேற்று காயாமொழியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த கட்டிடங்கள் திறப்புவிழா கல்வெட்டுகளை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சாத்தான்குளம் டவுன் பஞ்சாயத்து தலைவி ரெஜினிஸ்டெல்லாபாய், சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம் நன்றி கூறினார். பின்னர் 2 துணை சுகாதார நிலைய கட்டிடங்களை டவுன் பஞ்சாயத்து தலைவி திறந்து வைத்தார்.


Next Story