சாத்தான்குளத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சாத்தான்குளத்தில்  ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க சாத்தான்குளம் வட்டத் தலைவர் தேவ சமாதானம் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தாசில்தார் நடராஜன், ஓய்வு பெற்ற ஒன்றிய ஆணையாளர் இஸ்ரவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட இணைச் செயலாளர் சேசுமணி வரவேற்றார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அனைத்து நோய்களுக்கும் முழுமையான செலவு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் திரவியம், மாவட்ட இணைச்செயலாளர் ஜெயபால், அரசு ஊழியர் சங்க சாத்தான்குளம் வட்ட தலைவர் சுதர்சன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். ஓய்வூதியர்கள் தோட்டக்கலைத்துறை ஜெபராஜ், ஊரக வளர்ச்சி துறை மகாராஜன், சுடலைக்கண், மந்திரம் கோபால், பார்வதி, புஷ்பம், சின்னப்பா, ஜோசப் துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். வட்ட துணைத் தலைவர் பாண்டியன் நன்றி கூறினார்.


Next Story