சத்தியமங்கலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 97 பேர் கைது
சத்தியமங்கலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 97 பேர் கைது செய்யப்பட்டனா்.
ஈரோடு
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 'வெல்லட்டும் வெல்லட்டும் இந்து தர்மம் வெல்லட்டும். சனாதனத்தை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டிக்கிறோம்' என கண்டன கோஷங்கள் எழுப்பினர். அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி இந்து முன்னணியினர் 97 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சத்தியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story