சிவகங்கை நகராட்சியில் விண்ணப்பித்த அன்றே பிறப்பு, இறப்பு சான்றிதழ்


சிவகங்கை நகராட்சியில் விண்ணப்பித்த அன்றே பிறப்பு, இறப்பு சான்றிதழ்
x

தமிழகத்தில் முதல்முறையாக சிவகங்கை நகராட்சியில் ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரே நாளில் வீட்டிற்கு சான்றிதழை அனுப்பி வைக்கும் திட்டத்தை நகரசபை தலைவர் துரை ஆனந்த் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை

சிவகங்கை,

தமிழகத்தில் முதல்முறையாக சிவகங்கை நகராட்சியில் ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரே நாளில் வீட்டிற்கு சான்றிதழை அனுப்பி வைக்கும் திட்டத்தை நகரசபை தலைவர் துரை ஆனந்த் தொடங்கி வைத்தார்.

தொடக்க விழா

சிவகங்கை நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தபால் மூலம் சான்றிதழை வீட்டிற்கு அனுப்பும் திட்டத்தின் தொடக்க விழா நகரசபை பொறியாளர் பாண்டீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. நகரசபை தலைவர் துரை ஆனந்த் பிறப்பு இறப்பு சான்றிதழ் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழை வீட்டிற்கு அனுப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 138 நகராட்சிகள் உள்ளன. இதில் சிவகங்கை நகராட்சியில் முதன்முதலாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தவர்களுக்கு ஒரே நாளில் சான்றிதழை வீட்டிற்கு அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது தற்போது வரை நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு 58 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவருக்குமே சான்றிதழ் அனுப்பப்பட்டுவிட்டது.

நகராட்சிக்கு அலைய வேண்டாம்

இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு சான்றிதழ் கேட்டு நகராட்சிக்கு இனி அலைய வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை மட்டும் ஆன்லைன் மூலமாக செலுத்தினால் போதும். விண்ணப்பித்த ஒரே நாளில் சான்றிதழ் வீடு தேடி வரும். இதன் மூலம் பொதுமக்கள் சான்றிதழுக்காக நகராட்சியில் புரோக்கர்களை தேடி அலைய வேண்டி நிலை இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்

நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் அயூப் கான், சுகாதார அலுவலர் முத்து கணேஷ், கட்டிட ஆய்வாளர் திலகவதி, சுகாதார ஆய்வாளர் சின்னையா மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story