சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.32 லட்சம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.32 லட்சம்
x

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.32 லட்சம் இருந்தது.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.32 லட்சம்சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.32 லட்சம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.32 லட்சம் இருந்தது.

சோளிங்கர் பெரிய மலையில் யோக நரசிம்மர் கோவிலும், சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது. கோவிலில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் காணிக்கை செலுத்த 2 மலைக்கோவில், மலை அடிவாரம், தக்கான்குளம், பக்தோசிதப்பெருமாள் கோவில் உள்பட 15 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் உதவி ஆணையர் ஜெயா தலைமையில் நடைபெற்றது. இதில் ரொக்கமாக ரூ.32 லட்சத்து 6 ஆயிரமும், 96 கிராம் தங்கமும், 81 கிராம் வெள்ளியும் இருந்தது. இவை கோவிலின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

Next Story