தெற்கு ஆத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை


தெற்கு ஆத்தூரில் உள்ள  டாஸ்மாக் கடையை வேறு   இடத்துக்கு மாற்ற கோரிக்கை
x

தெற்கு ஆத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் சுற்று வட்டார நாடார் உறவின்முறை சங்க வளாகத்தில் தெற்கு ஆத்தூர் சுற்று வட்டார அனைத்து சமுதாய நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தெற்காத்தூர், மரந்தலை, கொலுவைநல்லூர், கீரனூர், மேலாத்தூர், புன்னைச்சாத்தான்குறிச்சி, சுகந்தலை, உட்பட பல ஊர்களைச் சேர்ந்த கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு ஆத்தூர் சுற்று வட்டார நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் கா. செல்வராஜ் நாடார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், தெற்கு ஆத்தூர் பஸ் நிறுத்தத்தில் அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல வேண்டும். மேலும்,

மேலாத்தூர் பஸ் நிறுத்தத்திலும் அரசு பஸ்கள் நிற்காமல் செல்வதால் கல்லூரி, மருத்துவமனை, வியாபாரம் தொடர்பாக வெளியூர்களுக்கு செல்லும் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த பஸ் நிறுத்தத்திலும் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தெற்கு ஆத்தூர் டாஸ்மார்க் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். தெற்கு ஆத்தூர் முஸ்லிம் தெருவில் வேகத்தடை அமைக்க வேண்டும். ஆத்தூர் அரசு மருத்துவமனையை தர உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story