தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா கருடசேவை
தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா கருடசேவை நடந்தது.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் நேற்று பங்குனி திருவிழாவை முன்னிட்டு கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கருடசேவை
நவதிருப்பதி கோவில்கள் ஏழாவது திருப்பதியாகவும், சுக்கிரனுக்கு அதிபதியாகவும் விளங்கும் தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாநாட்களில் சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்து வந்தது. முக்கிய திருவிழாவான கருடசேவை நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதை முன்னிட்டு நேற்றுமுன்தினம் காலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 11 மணிக்கு பந்தல்மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சனமும், கோஷ்டியும் நடைபெற்றது. இரவில் சுவாமி நிகரில்முகில்வண்ணன் கருடவாகனத்திலும், திருப்பேரை நாச்சியார் அன்னவாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனா்.
தேரோட்டம்
இந்தநிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி நிகரில்முகில்வண்ணன், அம்பாள்களுடன் பல்வேறு வாகனங்களில் மாடவீதி மற்றும் ரதவீதிகளில் வீதி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் மற்றும் உபயதாரா்கள் செய்து வருகின்றா்.