ஸ்பிக்நகரில்தென் மண்டல கராத்தே போட்டி
ஸ்பிக்நகரில் தென் மண்டல கராத்தே போட்டி நடந்தது.
ஸ்பிக் நகர்:
தென்மண்டல அளவிலான கராத்தே போட்டி ஸ்பிக் நகர் சில்வர் ஜூப்ளி ஹாலில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிக்கு ஸ்பிக் முதன்மை அலுவலர் பாலு தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். ஸ்பிக் நகர் மல்டி ஆக்டிவிட்டி கிளப் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பிரேம் சுந்தர் முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். போட்டிக்கு தலைமை நடுவராக கராத்தே டூ இந்திய தலைமை பயிற்சியாளர் சோபுக்காய் கோஜூரியு, தொழில்நுட்ப இயக்குனர் சுரேஷ்குமார் ஆகியோர் செயல்பட்டனர். போட்டி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட தலைவர் செந்தில், துணைத் தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் முத்துராஜா மற்றும் பயிற்சியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.