ஸ்ரீமுஷ்ணத்தில் தச்சு தொழிலாளியை கடத்தி சென்று வழிப்பறி


ஸ்ரீமுஷ்ணத்தில்  தச்சு தொழிலாளியை கடத்தி சென்று வழிப்பறி
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணத்தில் தச்சு தொழிலாளியை கடத்தி சென்று வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் மகன் ஞானமணி (வயது 57). ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஒரு மரப்பட்டறையில் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மதியம் வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவீட்டு பட்டறைக்கு வந்து கொண்டிருந்தார்.

ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகம் அருகில் வந்து கொண்டிருந்தபோது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர், மர வேலைக்கு தேக்கு மர சைஸ் தேர்வு செய்ய உங்கள் சகஆசாரி ஆண்டிமடம் சாலையில் உள்ள வேறு ஒரு மரப்பட்டறைக்கு வரச் சொன்னதாக கூறி, ஞானமணியை தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டனர்.

பணம் பறிப்பு

ஆனால் அவர்கள் ஆண்டிமடம் சாலையில் உள்ள மரப்பட்டறைக்கு செல்லாமல், ஊர் எல்லையில் உள்ள முந்திரி காட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கு வைத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துள்ளனர். இதில் வலி தாங்க முடியாமல் ஞானமணி அலறித்துடித்தார். இந்த சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அங்கு வந்தனர். ஆட்கள் வருவதை பார்த்ததும் அவர்கள் ஞானமணியை விட்டு விட்டு தப்பி சென்றனர்.

2 பேர் கைது

பின்னர் இதுகுறித்து ஞானமணி ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ஸ்ரீமுஷ்ணம் டாஸ்மாக் கடை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 5 பேரை போலீசார் பிடிக்க முயன்றனர். அதில் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பேரை மட்டும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மழவராயநல்லூர் மேட்டுத்தெருவை சேர்ந்த ராமதாஸ் மகன் தமிழழகன்(32), குமாரகுடி குளத்து மேட்டுத்தெருவை சேர்ந்த ரவி மகன் வேல்மணி (29) என்பதும், ஞானமணியை கடத்தி சென்று வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தமிழழகன் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.


Next Story