ஸ்ரீவைகுண்டத்தில்பொதுமக்கள் திடீர் போராட்டம்


ஸ்ரீவைகுண்டத்தில்பொதுமக்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி தாமிரபரணி ஆற்று பாலத்தில் நேற்று இரவில் பொதுமக்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர்-நெல்லை மார்க்கத்தில் இயக்கப்படும் பஸ்கள் விதிமுறைகளை பின்பற்றி ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் செல்வதை கண்டித்தும், சம்மந்தப்பட்ட டிரைவர், ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பஸ் டிரைவர், ஓட்டுனர்களிடம் பொதுமக்கள் முறையாக பஸ்களை இயக்க வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சப்- இன்ஸ்பெக்டர்கள் அருள் சாம்ராஜ், பெபின் செல்வ பிரிட்டோ ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்களிடம் விசாரணை நடத்தினர். பொதுமக்களை போலீசார் சமாதானம் செய்ததால் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் ேபாலீஸ் நிலையம் சென்ற பொதுமக்கள் இன்ஸ்பெக்டர் அன்னராஜிடம் ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்து செல்லும் பஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.


Next Story