ஸ்ரீவைகுண்டத்தில்சி.ஐ.டி.யு. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஸ்ரீவைகுண்டத்தில்சி.ஐ.டி.யு. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டத்தில் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாணை 322-ஐ ரத்து செய்யக் கோரியும் ஸ்ரீவைகுண்டம் அரசு பஸ் போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பணிமனை தலைவர் லெட்சுமணன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவசுப்பு முன்னிலை வகித்தார். நெல்லை மண்டல பொருளாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.


Next Story