ஸ்ரீவைகுண்டத்தில்சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஸ்ரீவைகுண்டத்தில்சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் காலைச் சிற்றுணவு திட்டத்தை சத்துணவு திட்டத்தின் மூலம் தமிழக அரசே நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரா தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட செயலாளர் ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story