மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்


மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில்  பதக்கம் வென்றவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்  கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்று தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள், ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் வென்ற தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்கள், மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற பொதுவாக மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்று பதக்கங்கள் வென்றவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின்கீழ் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in என்ற முகவரியில் தங்களது விண்ணப்பங்களை வருகிற 15-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்திட வேண்டும். ஏற்கனவே அஞ்சல் வழியில் நேரடியாக விண்ணப்பித்திருந்தாலும், மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தினை காலை 10 மணி முதல் 5 மணிவரை அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம். மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story