சூரங்குடியில்ரூ.7 லட்சத்தில் புதிய கலையரங்கம் திறப்பு
சூரங்குடியில் ரூ.7 லட்சத்தில் புதிய கலையரங்கம் திறக்கப்பட்டது.
எட்டயபுரம்:
சூரங்குடி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சூரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வேலுத்தாய் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கலையரங்கத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், ஒன்றிய குழு உறுப்பினர் செந்தூர்பாண்டியன் மருதக்கனி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் கரன் குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் சார்பாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இதை எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்