சிறுமலையில் ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு


சிறுமலையில்  ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
x

திண்டுக்கல் அருகே சிறுமலையில் ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே சிறுமலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது சிறுமலை ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் அண்ணாநகர், பொன்னுருக்கி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் சமுதாயக்கூடங்கள், சிறுமலை பழையூரில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை மற்றும் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப்படும் தார்சாலை, சிமெண்ட் சாலை ஆகியவற்றை கூடுதல் கலெக்டர் பார்வையிட்டார்.

இதேபோல் சிறுமலை அண்ணா நகரில் பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்டும் பணி, சிறுமலை புதூர் உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன், கிருஷ்ணன், ஒன்றிய பொறியாளர் முருகன், சிறுமலை ஊராட்சி தலைவர் சங்கீதா, செயலர் முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story