தாளவாடி பகுதியில் பலத்த மழையால்வீடு இடிந்து விழுந்தது தோட்டத்தில் தண்ணீர் தேங்கியது


தாளவாடி பகுதியில்   பலத்த மழையால்வீடு இடிந்து விழுந்தது   தோட்டத்தில் தண்ணீர் தேங்கியது
x

தோட்டத்தில் தண்ணீர் தேங்கியது

ஈரோடு

தாளவாடி, நெய்தாளபுரம், தொட்டகாஜனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை பலத்த மழை பெய்தது. 3 மணி நேரம் கொட்டி தீர்த்த பலத்த மழையால் அங்குள்ள நீரோடை மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் தோட்டங்களிலும் மழைநீர் தேங்கியது. இதனால் தொட்டகாஜனூர் பகுதியில் உள்ள தோட்டங்களில் பயிரிடப்பட்டு உள்ள வாழை மற்றும் காய்கறி பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

தாளவாடி அருகே உள்ள நெய்தாளபுரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அந்த கிராமத்தை சேர்ந்த நாகப்பா (வயது 46) என்பவரது வீட்டின் பின்பக்க சுவர் நேற்று இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாளவாடி பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி உள்ளன.


Next Story