தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில்குடியரசு தின விழா
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது, வங்கியின் பெருமை மிகு வாடிக்கையாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அனைத்து உடமைதாரர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
விழாவில் வங்கி தலைமை கணக்கு அதிகாரி, பொதுமேலாளர்கள், துணை மற்றும் இணை பொது மேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story