பிளஸ்-1 தேர்வில் தென்காசியில் 90.35 சதவீதம் பேர் தேர்ச்சி
நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 92.21 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தென்காசி மாவட்டத்தில் 90.35 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 92.21 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தென்காசி மாவட்டத்தில் 90.35 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
பிளஸ்-1 தேர்வு
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்த பிறகு கடந்த கல்வி ஆண்டில் வகுப்புகள் தொடங்கி நடைபெற்றது. இதையொட்டி பிளஸ்-1 பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் 9,774 மாணவர்கள், 11,044 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 818 பேர் தேர்வு எழுதி இருந்தனர்.
92.21 சதவீதம் தேர்ச்சி
இவர்களது விடைத்தாள்கள் மதிப்பீடு செய்து, நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் நெல்லை மாவட்டத்தில் 8,564 மாணவர்கள், 10,633 மாணவிகள் என மொத்தம் 19,197 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 92.21 சதவீதம் ஆகும். மாணவர்கள் 87.62 சதவீதம் பேரும், மாணவிகள் 96.28 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.
இதற்கிைடயே எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள் உடனடி துணை தேர்வு எழுதுவதற்கு நேற்று இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் தென்காசி கல்வி மாவட்டத்தில் 4,393 மாணவர்களும், 5,287 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 3,816 மாணவர்களும், 5,072 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.
இதேபோன்று சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் 3,892 மாணவர்களும், 4,042 மாணவிகளும் தேர்வு எழுதியதில் 3,185 மாணவர்களும், 3,842 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தென்காசி கல்வி மாவட்டத்தில் 91.82 சதவீதமும், சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.
தென்காசி மாவட்டத்தில் 90.35 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.