2023-24-ம் கல்வியாண்டில்புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்


2023-24-ம் கல்வியாண்டில்புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க பிப்.28-ந் தேதி கடைசிநாளாகும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தொழிற்பள்ளி

2023-24-ம் கல்வியாண்டுக்கு புதிய தொழிற் பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கடைசிநாள்

2023-24-ம் கல்வியாண்டுக்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ஆர்.டி.ஜி.எஸ். மற்றும் என்.இ.எப்.டி மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்பக் கட்டணம் ரூ.5 ஆயிரம் மற்றும் ஆய்வுக்கட்டணம் ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் 28.2.2023 ஆகும். அதற்குபின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-22501006 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது detischennai@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டும் விவரங்கள் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story