அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; மக்காச்சோள பயிர் சாய்ந்தன


அந்தியூர் பகுதியில்  சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; மக்காச்சோள பயிர் சாய்ந்தன
x

சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை

ஈரோடு

அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மக்காச்சோள பயிர் சாய்ந்தன.

பலத்த மழை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் நேற்று காலை முதல் வெப்ப காற்று வீசியது. மாலை 4 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. அதன்பின்னர் மழை தூறியது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறி மாலை 5 மணி வரை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அதேபோல் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான செல்லபாளையம், புதுப்பாளையம், வட்டக்காடு உள்பட அந்தியூரை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது.

சூறாவளிக்காற்றில் பயிர் சாய்ந்தன

அப்போது பலத்த சூறாவளிக்காற்றும் வீசியது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வட்டக்காடு பகுதியில் உள்ள தோட்டங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த 4 ஏக்கர் பரப்பளவிலான மக்காளச்சோள பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.


Next Story