ஏரல்-சாத்தான்குளத்தில்அ.தி.மு.க. பூத்கமிட்டி அமைப்பு கூட்டம்
ஏரல்-சாத்தான்குளத்தில் அ.தி.மு.க. பூத்கமிட்டி அமைப்பு கூட்டம் நடந்தது.
ஏரல்:
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி ஸ்ரீவைகுண்டம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய பகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பு கூட்டம் ஏரலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு கிழக்கு ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் அன்னை வி.ஜி. சரவணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி அமைப்பு படிவத்தை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் உமரிக்காடு பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, சாத்தான்குளம் ஒன்றிய, நகர அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் அச்சம்பாடு சவுந்திரபாண்டி தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்.பி. சண்முகநாதன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து ஒன்றிய, நகர செயலாளர்களிடம் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான புத்தகம் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளரும், புதுககுளம் ஊராட்சித் தலைவருமான பாலமேனன், ஜெயலலிதா பேரவை தலைவர் சின்னத்துரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.