திருச்செந்தூரில் பந்தல் மண்டபம் பகுதியில் வாகன போக்குவரத்தை தடை செய்ய கோரிக்கை
திருச்செந்தூரில் பந்தல் மண்டபம் பகுதியில் வாகன போக்குவரத்தை தடை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் திருந்செந்தூர் உதவி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறிருப்பதாவது:-
குலசேகரன்பட்டினம் அரசு மருத்துவமனை பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். ஆத்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் தரை பாலத்தை உயர்மட்ட பாலமாக உயர்த்த வேண்டும். போக்குவரத்து நெருக்கடி விபத்துகளை தவிர்க்க ஆறுமுகநேரி பள்ளிவாசலில் ரவுண்டானா அமைக்க வேண்டும். ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து முன்பு குவிந்து கிடைக்கும் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும். திருச்செந்தூர் பந்தல் மண்டபம் பகுதியில் வாகன போக்குவரத்தை தடை செய்ய வேண்டும். அதேபோல் போக்கு வரத்துக்கு இடையூறுயாக திருச்செந்தூர் கோவில் தெரு, அங்கு உள்ள ஓட்டல்கள் முன்பு, கீழரதவீதி, தேரடி மாடன் இசக்கி அம்மன் கோவில் முன்பு வாகனங்களை நிறுத்துவதை தடைசெய்ய வேண்டும். காயல்பட்டினம் பஸ் நிலையம் எதிரில் உள்ள விளையாட்டு திடலை விரிவாக்கம் செய்து அங்கு குழந்தைகள் பூங்கா அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. அவருடன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சண்முகநாதன், திருச்செந்தூர் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா, தூத்துக்குடி நகர அமைப்பாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.