பர்கூர் மலைப்பகுதியில் ரோட்டில் உலா வந்த காட்டு யானை
பர்கூர் மலைப்பகுதியில் ரோட்டில் காட்டு யானை உலா வந்தது.
ஈரோடு
அந்தியூர்
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரையில் இருந்து மைசூரு செல்லும் சாலையில் சுண்டப்பூர் பிரிவு என்ற இடத்தில் ஒற்றை காட்டு யானை நேற்று மாலை 4.30 மணி அளவில் வந்தது. பின்னர் அந்த யானை ரோட்டில் உலா வந்தது. யானையை கண்டதும் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை அப்படியே நிறுத்திவிட்டனர். இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 5 மணி அளவில் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன. ரோட்டில் உலா வந்த யானையால் பர்கூர் மலைப்பகுதியில் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story