குளித்தலையில், ஆட்டோவில் புகுந்த பாம்பால் பரபரப்பு
குளித்தலையில், ஆட்டோவில் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குளித்தலை பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓரத்தில் பயணிகள் ஆட்டோ நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு பயணிகள் ஆட்டோ நேற்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த அய்யப்பன் என்பவரது ஆட்டோவில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதை பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் பார்த்துள்ளனர். பின்னர் ஆட்டோவில் பாம்பு புகுந்தது குறித்து அங்கிருந்த ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆட்டோவில் இருந்த பாம்பை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு ஆட்டோவில் இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாபகமாக பிடித்தனர் பிடிக்கப்பட்ட அந்த பாம்பு வனப்பகுதியில் விடுவதற்காக அவர்கள் கொண்டு சென்றனர். நகரப் பகுதிக்குள் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஆட்டோவில் பாம்பு புகுந்த சம்பவம் இப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்படுத்தியது.