பொக்லைன் எந்திரத்தில் டீசல் திருடிய 2 பேர் கைது
தட்டார்மடம் அருகே பொக்லைன் எந்திரத்தில் டீசல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தட்டார்மடம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேல அரசரடியை சேர்ந்த தங்கராஜ் மகன் கொம்புராஜ். இவர் சாத்தான்குளம் அருகே உள்ள பிரகாசபுரத்திலிருந்து சாலைபுதூர் செல்லும் வரை கால்வாய் தோண்டும் பணியை காண்டிராக்ட் எடுத்துள்ளார். இந்தப் பணியில் திருவண்ணாமலை சேர்ந்த பாலுகுண்டன் மகன் கந்தன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் ஹேமந்த் குமார் உள்பட 17 பேர் கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் கந்தனும், ஹேமந்த் குமாரும் கால்வாய் பணிக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரங்களில் இருந்து 50 லிட்டர் டீசலை திருடிக் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து கொம்புராஜ் கொடுத்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து கந்தன், ஹேந்த்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட 50 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.