காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 27 பேர் காயம்


காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 27 பேர் காயம்
x

செங்குட்டை பகுதியில் காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 27 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

செங்குட்டை பகுதியில் காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 27 பேர் காயம் அடைந்தனர்.

காட்பாடி செங்குட்டை பகுதியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று காளை விடும் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு செங்குட்டை சாலையின் இருபுறமும் மூங்கில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டிருந்தன. காலை 10 மணிக்கு காளைவிடும் விழாவை வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார். காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தார்.

இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 312 காளைகள் கலந்துகொண்டன. விழாவில் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடந்த காளைகளுக்கு அவற்றின் உரிமையாளர்களிடம் பரிசுகள் வழங்கப்பட்டன.

சீறிப்பாய்ந்து வந்த மாடுகள் முட்டியதில் 27 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் 25 பேருக்கு சிறுகாயம் என்பதால் அங்கேயே அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயம் அடைந்த 2 பேர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story