33 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்ட வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு


33 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்ட வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு
x

33 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்ட வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை

33 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்ட வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தங்கம் கடத்தல்

இலங்கையில் இருந்து படகு மூலம் மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக தங்கக்கட்டிகள் கடத்தி வந்தது குறித்து தகவல் கிடைத்ததும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், இந்திய கடலோர காவல் படையினரும் ரோந்து படகுகளில் விரைந்து சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே நடுக்கடலில் அதிகாரிகளை கண்டதும் கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகள் வைத்திருந்த பார்சல்களை கடலுக்குள் வீசிவிட்டு தப்ப முயன்றனர். அவர்களை மடக்கிப்பிடித்த அதிகாரிகள் படகை பறிமுதல் செய்ததுடன் அதில் இருந்த 3 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் வேதாளை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வேதாளையில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 20 கிலோ கடத்தல் தங்கக்கட்டிகளை அதிகாரிகள் மொத்தமாக கைப்பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீட்டில் இருந்த 2 பேரையும் கைது செய்தனர்.

இந்திய கடலோர காவல் படையில், ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் தேடி ,கடலில் வீசப்பட்ட சுமார் 13 கிலோ தங்கக்கட்டிகளுடன் கூடிய பார்சல்களையும் நேற்று முன்தினம் கைப்பற்றினர்.

33 கிலோ தங்கம்

அடுத்தடுத்த நடவடிக்கையின் மூலம் சுமார் 33 கிலோ தங்கம் ஒரே நேரத்தில் சிக்கியது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பேசும் பொருளாகவும் மாறியது.

கைதான 5 பேைரயும், மதுரை சுங்கத்துறை அலுவலகம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பிரமுகர்களுக்கு தொடர்பு

அதே நேரத்தில் தங்கக்கட்டிகள் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீதும் ஏற்கனவே என்னென்ன வழக்குகள் உள்ளன என்பது குறித்து மத்திய-மாநில உளவுப்பிரிவு மற்றும் கடலோர போலீசார் தீவிரமாக விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் கடத்தலில் சில பிரமுகர்களுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார், இலங்கையில் யாரிடம் இருந்து கடத்தல் தங்கத்தை வாங்கி வந்தார்கள், சர்வதேச கடல் எல்லையில் யார் மூலம் கைமாற்றினார்கள், யாருக்கு இந்த தங்கக்கட்டிகள் அனுப்பி வைக்கப்பட இருந்தன? என்பன பற்றிய முழுவிவரமும் விசாரணைக்கு பின்னர் தெரியவரும் என அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.


Related Tags :
Next Story