வாலிபரை கொன்று உடலை எரித்த வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வந்தவாசி அருகே வாலிபரை கொன்ற உடலை எரித்த வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வந்தவாசி
வந்தவாசி அருகே வாலிபரை கொன்ற உடலை எரித்த வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
எரித்துக்கொலை
வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர ஏழுமலை மளிகைக்கடை உரிமையாளர். இவரது மகன் விஜய் (வயது 21) மளிகைக் கடையை கவனித்து வந்தார். இவருக்கும் வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மொய்தீன் (35) என்பவருக்கும் பணப்பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய்யின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பதாக அளித்த தகவலின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்ததால் விஜய்க்கும் எதிர் தரப்பினரான நல்லூரைச் சேர்ந்த நாராயணசாமி (32), இவரது உறவினர் வரதன் (41) ஆகியோருக்கும் இடையே தகராறு வலுத்தது.
இந்த நிலையில் மொய்தீன், நாராயணசாமி, வரதன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி இரவு விஜய்யை வரவழைத்தனர். அப்போது விஜய்யை கொலை செய்து அவரைக் கொன்று சடலத்தை எரித்தனர்.
3 பேர் கைது
இது தொடர்பாக தெள்ளார் போலீசார் வழக்குப்பதிந்து மொய்தீன், நாராயணசாமி, வரதன் ஆகிய 3 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் மொய்தீன், நாராயணசாமி, வரதன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் உள்ள 3 பேரிடமும் இதற்கான உத்தரவு நகல் சனிக்கிழமை வழங்கப்பட்டது.