லாரி அதிபர் கொலை வழக்கில்மேலும் ஒரு வாலிபர் கைது


தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி லாரி அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). இவர் கடந்த 17-ந் தேதி, அந்த பகுதியில் உள்ள லாரி செட்டில் வைத்து வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய தெற்கு சங்கரப்பேரி, நடுத்தெருவைச் சேர்ந்த வெற்றிவேல் முருகன் (25) என்பவரை சிப்காட் போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.


Next Story