கடம்பூரில் கடமானை வேட்டையாடிய வழக்கில்3 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில்;கோபி கோர்ட்டு தீர்ப்பு


கடம்பூரில் கடமானை வேட்டையாடிய வழக்கில்3 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில்;கோபி கோர்ட்டு தீர்ப்பு
x

கடம்பூர் வனப்பகுதியில் கடமானை வேட்டையாடிய வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஈரோடு

கடத்தூர்

கடம்பூர் வனப்பகுதியில் கடமானை வேட்டையாடிய வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கடமான் வேட்டை

கோபி அருகே உள்ள கடம்பூர் வனப்பகுதியில் உள்ள குமரிமடுவு என்ற இடத்தில் வனத்துறையினர் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வனப்பகுதியில் 5 பேர் கும்பல் கட மான் ஒன்றையும், உடும்பு ஒன்றையும் வேட்டையாடி வைத்து இருந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களை வனத்துறையினர் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடினார்கள். அவர்களை வனத்துறையினர் விரட்டி சென்று பிடித்தனர். இதில் கட மான் மற்றும் உடும்பை வேட்டையாடியதாக கடம்பூரை சேர்ந்த வீரன் (வயது 29), வேலுச்சாமி (37), ஜடைசாமி (37), ரங்கன் (30), கண்ணன் (32) ஆகிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சிறை தண்டனை

அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரும் கோபி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ல் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது வேலுச்சாமி, கண்ணன் ஆகியோர் இறந்துவிட்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணை கோபி முதலாம் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு விஜய் அழகிரி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், கடமான் மற்றும் உடும்பை வேட்டையாடிய வீரன், ஜடைசாமி, ரங்கன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.27 ஆயிரத்து 500 அபராதமும் விதித்தும் தீர்ப்பு கூறினார்.


Related Tags :
Next Story