முதுமலையில் காட்டெருமையை சுட்டுக்கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை-கூடலூர் கோர்ட்டு தீர்ப்பு

முதுமலையில் காட்டெருமையை சுட்டுக்கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை-கூடலூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை வனப்பகுதிக்குள் நுழைந்து காட்டெருமையை சுட்டுக்கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கூடலூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது

நீலகிரி

கூடலூர்

முதுமலை வனப்பகுதிக்குள் நுழைந்து காட்டெருமையை சுட்டுக்கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கூடலூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது

காட்டெருமையை கொன்ற வழக்கு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள போஸ்பாரா வனப்பகுதியில் நுழைந்து கடந்த 6.1.2002-ம் ஆண்டு காட்டெருமை சுட்டுக் கொல்லப்பட்டு அதன் இறைச்சியை விற்பனை செய்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து முதுமலை வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து பின்னர் கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை ஊராட்சி ஓடக்கொல்லி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஷாஜி என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

3 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு விசாரணை 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. நேற்று கூடலூர் நீதிமன்றத்தில் நீதிபதி சசின்குமார் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஷாஜிக்கு (வயது 48) 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இது குறித்து வனச்சரகர் மனோகரன் கூறும்போது, 2002-ம் ஆண்டு காட்டெருமையை சுட்டுக்கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டு ஓடக்கொல்லி ஷாஜி என்ற குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story