புஞ்சைபுளியம்பட்டி அருகே முதியவர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி சத்தி கோர்ட்டில் சரண்


புஞ்சைபுளியம்பட்டி அருகே முதியவர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி சத்தி கோர்ட்டில் சரண்
x

புஞ்சைபுளியம்பட்டி அருகே முதியவர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி சத்தி கோர்ட்டில் சரண் அடைந்தாா்

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பூக்கம்பள்ளியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 67). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் ரோட்டில் உள்ள மதுபான கடை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சுப்பிரமணி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரகாஷ் (40) என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய புஞ்சைபுளியம்பட்டி காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த தொழிலாளியான ஜெய்லானி (40) என்பவரை வலைவீசி தேடி வந்தனர். இதனால் அவர் தலைமறைவானார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஜெய்லானி சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து ஜெய்லானியை போலீசார் கைது செய்து கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.


Next Story