டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

மதுரையில் டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மதுரை

மேலூர்

மதுரையில் டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கொலை

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் டிராவல்ஸ் அதிபர் சுரேஷ்(வயது 50). இவருக்கு மேலூர் அருகே சாம்பிராணிபட்டியில் தென்னந்தோப்பு உள்ளது.

இவரது தோப்புக்கு அருகே சாம்பிராணிபட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(45) என்பவரது தென்னந்தோப்பும் உள்ளது.

இவர்கள் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் 18-ந் தேதி டிராவல்ஸ் அதிபர் சுரேஷ் மதுரையில் இருந்து காரில் சாம்பிராணிபட்டியில் அவரது தென்னந்தோப்புக்கு வந்தார். பின்னர் இரவு 8 மணியளவில் அவர் காரை ஓட்டிக்கொண்டு திரும்பி வந்தபோது சாம்பிராணிபட்டி மந்தை அருகே 5 பேர் அடங்கிய கும்பல் சுரேஷை வழிமறித்து ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

குண்டர் சட்டம்

இதில் சம்பவ இடத்தில் சுரேஷ் இறந்து போனார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேலவளவு போலீசார் சாம்பிராணிபட்டியை சேர்ந்த கார்மேகம்(51), அஜித்பாலன்(26), திருமலை(42), ராமு(61), பாண்டிச்செல்வி (45), அழகம்மாள்(43), ஜெயலட்சுமி (40), சுகன்யா(26), சிறுவர்கள் 2 பேர் மற்றும் அ.வல்லாளபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (59), பரத்ராஜ் (30), காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த சிபி (21) ஆகிய 13 பேரை கைது செய்தனர். தலைமறைவாகி இருந்த கோபாலகிருஷ்ணன் கோர்ட்டில் சரண் அடைந்தார்

இந்தநிைலயில் கோபாலகிருஷ்ணன், கார்மேகம், அஜித்பாலன் ஆகிய 3 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார். இதனையடுத்து சிறையில் உள்ள கோபாலகிருஷ்ணன், கார்மேகம், அஜித்பாலன் ஆகியோர் மீது குண்டம் சட்டம் பாய்ந்தது.


Next Story