ஆத்தூர் அருகே உப்பளத்தொழிலாளி கொலை வழக்கில் 3 வாலிபர்கள் கைது
ஆத்தூர் அருகே உப்பளத்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே உப்பளத்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
உப்பளத்தொழிலாளி கொலை
ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி வடக்கு தெருவை சேர்ந்த ராமசாமி மகன் சண்முகராஜ் (வயது 45). உப்பளத் தொழிலாளியான இவர் கடந்த 29-ந்தேதி மாலை 5.30 மணியளவில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் ஆத்தூருக்கு சென்றுள்ளார்.
ஆவரையூர் அருகே கல்வெட்டி என்ற இடத்தில் அவரை வழிமறித்த கும்பல் வெட்டிக்கொலை செய்தது.
3 பேர் கைது
இந்த கொலை தொடர்பாக ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த பலவேசம் மகன் உதயமூர்த்தி (20), தலைவன்வடலி சேதுராஜா தெருவை சேர்ந்த திருமலை மகன் கார்த்தி (22), அதே தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் மோகன் சபரிநாத்(22) ஆகிய 3 பேரை ஆத்தூர் போலீசார் கைது ெசய்தனர்.
மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.